67 வயதில், பின்வரும் அறிகுறிகளில் எதையேனும் நீங்கள் கவனித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். இவை கண்டிப்பாக புற்றுநோயைக் குறிப்பவை என்று அர்த்தமில்லை. ஆனால், இவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது.
• மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல்
• சளியில் ரத்தம் வருதல்
• காரணமில்லாமல் உடல் எடை குறைவது அல்லது பசியின்மை
• தொடர்ச்சியான நெஞ்சு வலி அல்லது மூச்சுத்திணறல் அதிகரிப்பது
• மீண்டும் மீண்டும் ஏற்படும் நெஞ்சுத் தொற்றுகள்
உங்கள் பழைய நெஞ்சக எக்ஸ்ரே (X-ray) மற்றும் காசநோய் சிகிச்சை பதிவுகளைப் பத்திரமாக வைத்திருங்கள். அப்போதுதான் உங்கள் மருத்துவர் அவற்றை புதிய பரிசோதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். தேவைப்படுகிற புதிய பரிசோதனைகளைச் செய்யச் சொல்வார்.
உங்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றால், வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள், ஆரோக்கியமான வாழ்வியல் முறை மற்றும் புகையிலைப் பழக்கம் இல்லாமல் இருப்பது ஆகியவையே சிறந்த வழிகளாகும். விழிப்புடன் இருங்கள், கவலைப்பட வேண்டியதில்லை.
டாக்டர் காதர் ஹுசைன்:
சென்னை, Apollo Proton Cancer Center-ல் நெஞ்சக மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிகிறார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.