தீவிர தோல் நோய் பாதிப்பு: “என்ன நடந்தாலும் பணியைத் தொடர்வேன்’ – பிட்டு தபாஹி உறுதி | Severe skin disease: “I will continue my work no matter what happens” – Bittu Tabahi’s firm resolve

Spread the love

தான் ஆற்றைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோதே, சிலர் தனக்கு முன்னாலேயே கழிவுகளை ஆற்றில் கொட்டிச் சென்றதாகவும், நதிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்பு வசதிகளைச் சிலர் சேதப்படுத்தி நீரில் தூக்கி வீசியதாகவும் அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நதியை எவ்வாறு நிரந்தரமாகவும் திறம்படவும் தூய்மைப்படுத்துவது என்பது குறித்துத் தனது Followers களிடம் ஆலோசனைகளைக் கேட்டிருந்தார். இந்த நிலையில், தொடர்ந்து கழிவுநீரில் இறங்கி பணியாற்றியதால் தற்போது தீவிர தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கைகள் மற்றும் கால்களில் கடுமையான அரிப்பு, வலியால் அவதிப்பட்டு வரும் இவர், இரவு நேரத்தில் மாத்திரைகளை உட்கொண்டே தூங்க முடிகிறது. இருப்பினும், நதியை மீட்கும் தனது லட்சியத்தில் இருந்து பின்வாங்காமல், வலிநிவாரணிகளை உட்கொண்டு தினமும் காலையில் மீண்டும் தூய்மைப் பணிக்குச் சென்று வருகிறார்.

பிட்டு தபாஹி

பிட்டு தபாஹி

இவரின் உடல்நிலையைக் கண்டு அச்சமடைந்த பெற்றோர், உடனடியாக இந்த ஆபத்தான பணியை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும், தனது தூய்மைப் பணியைத் தொடர்ந்து வருகிறார். “எனது ஊரின் அடையாளமாகத் திகழும் நதி மீண்டும் குப்பைக் கிடங்காவதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை” என்கிறார்.

இவர் மாதக்கணக்கில் போராடி நதியைச் சுத்தம் செய்தபோதிலும், அப்பகுதி மக்கள் மீண்டும் அதில் குப்பைகளைக் கொட்டத் தொடங்கியுள்ளனர். பொதுமக்கள் குப்பை போடாமல் இருக்கத் தனது சொந்தச் செலவில் நதிக்கரையில் குப்பைத்தொட்டிகளை அமைத்தும் பலனில்லாமல் போயுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *