தீவிர புயலாக மாறிய முரசு; தமிழகத்திற்கு பாதிப்பு உண்டா?- வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை விளக்கம்| IMD Director Durai Explains about Cyclone Murasu

Spread the love

வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே கரையைக் கடக்க இருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளராக்களைச் சந்தித்து பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை, “”முரசு புயல்’ இன்று மதியம் 2 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்றிருக்கிறது. இந்தப் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் தெற்கு ஆந்திராவையோட்டிய பகுதிகளில் கரையைக் கடக்கும்.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். கடந்த காலத்தில் அர்னாப் புயல் கரையைக் கடந்தபோது ஏற்பட்ட பாதிப்புகளைப் போல, முரசு புயலால் பாதிப்பு இருக்காது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *