தூத்துக்குடியில் சசிகலா கொலை: ஸ்டாலின், கனிமொழி கண்டனம்|Woman Murdered at Home: Stalin, Kanimozhi Target TVK Government

Spread the love

தூத்துக்குடி கந்தன் காலனியில் வசித்த சசிகலா என்பவரை அவரது வீட்டிற்குள்ளேயே கொலை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தொடரும் கொலை சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா எனும் பெண்மணி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்! இதற்கு என்ன விநோத விளக்கத்தை மாவட்டக் காவல்துறையினர் வெளியிடப் போகின்றனர்?

வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் த.வெ.க.வின் சாதனையா?”

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கண்டனப் பதிவு:

“நேற்றைய தினம் தூத்துக்குடி கந்தன் காலனியில், வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நான்கு நாட்களில் ஏழு கொலைகள் எனத் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *