தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; இடம் மாறி படுத்திருந்த தொழிலாளர் கொலை செய்யப்பட்ட கொடூரம் | Dispute during drinks party Thoothukudi worker brutally murdered

Spread the love

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் குமார். சுகாதாரத்துறை ஊழியரான இவர், அய்யனடைப்பு பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன், சந்திரன், ஜோஸ், மெர்லின், சசி உள்ளிட்ட 10 பேர் தங்கி வீடு கட்டும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் தினமும் காலை முதல் மாலை வரை அங்கு கட்டிட வேலை செய்துவிட்டு இரவில் இதே வீட்டிற்கு எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் தங்கி வந்தனர்.

சிப்காட் காவல் நிலையம்

சிப்காட் காவல் நிலையம்

இந்த நிலையில், நேற்று இரவு அனைவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது சந்திரனுக்கும், மற்றொரு தொழிலாளரான மெர்லினுக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. சக தொழிலாளர்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.

இருப்பினும், ஆத்திரம் குறையாத சந்திரன், நள்ளிரவில் திடீரென எழுந்து மெர்லினைத் தேடியுள்ளார். அப்போது அங்கு படுத்திருந்த மனோகரனை மெர்லின் என நினைத்து சென்ட்ரிங் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *