‘தூய்மைப்படுத்தும் சடங்கு’: “என்னை அவமானப்படுத்த முயன்றுள்ளீர்கள்” – மல்லிகார்ஜுன கார்கே உருக்கம்!| Mallikarjun Kharge has spoken in the Lok Sabha about the purification ritual.

Spread the love

அதைத் தொடர்ந்து பேசிய கார்கே, “மேடையைத் தூய்மைப்படுத்தியவர்கள் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட வேண்டும்,” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசுகையில், “தீண்டாமை ஒரு பாவமில்லை என்றால், இந்த உலகத்தில் வேறு எதுவுமே பாவமில்லை. கட்சி அல்லது கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, நாம் அனைவரும் தீண்டாமையைக் கண்டிக்கிறோம்.

பிரியாங்க் கார்கே

பிரியாங்க் கார்கே

இங்கு எவரும் யாரையும் புனிதப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தவறு செய்தவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை,” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, “இந்த மனநிலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் சித்தாந்தத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. பிரதமர் மோடி இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *