மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் (UDISE) புதிய அறிக்கையில், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் இருப்பு, உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரம் எனப் பள்ளிக் கல்வியின் அனைத்து முக்கியக் குறியீடுகளிலும் தமிழ்நாடு தேசிய சராசரியை விட மிகச் சிறந்த இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள 2025-2026-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் (UDISE) புதிய அறிக்கையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தேசிய அளவில் மாபெரும் சாதனை படைத்துள்ளது தெரியவந்துள்ளது.
மாணவர் பங்கேற்பு, பள்ளிகளில் மாணவர்களைத் தக்கவைத்தல், ஆசிரியர்கள் இருப்பு, பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரம் எனப் பள்ளிக் கல்வியின் அனைத்து முக்கியக் குறியீடுகளிலும் தமிழ்நாடு தேசிய சராசரியை விடக் கணிசமான அளவில் சிறப்பாகச் செயல்பட்டு முதலிடத்தில் உள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவின் ஒட்டுமொத்தப் பள்ளிகளில் 3.9 சதவீதப் பள்ளிகளை மட்டுமே கொண்டுள்ள தமிழ்நாடு, நாட்டின் ஒட்டுமொத்தப் பள்ளி மாணவர்களில் 5 சதவீத மாணவர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் கல்வியளித்து வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மற்ற மாநிலங்களை விடப் பெரியதாகவும், அங்குள்ள கல்வி உள்கட்டமைப்புகள் மிகச் சரியான முறையிலும், திறம்படவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.