ஜனநாயகக் கட்சியில், அமெரிக்காவின் இந்நாள் அதிபர் ஜோ பைடன் அதிபர் தேர்தலிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜோ பைடனைவிட டிரம்புக்கு கடும் போட்டியாளாராக உருவெடுத்துள்ளார் கமலா ஹாரிஸ்.
இந்த நிலையில், டிரம்ப் கமலா ஹாரிஸ் மீது வார்தைப்போர் உரைத்து வருகிறார். கோல்ஃப் விளையாடுவதும், கமலா ஹாரிஸ் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் பிரசாரத்தின் வேகத்தை முடக்குவதாகவும், இதன் காரணமாக, தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு தங்கள் பக்கத்திலிருந்து நழுவி வருவதாகவும் குடியரசு கட்சியினரிடையே கவலை சூழ்ந்துள்ளது.
ஜனநாயகக் கட்சியின் தேசிய அளவிலான மாநாட்டில் கமலா ஹாரிஸின் உரையை பார்த்தவர்கள் எண்ணிக்கை 26.2 மில்லியனை கடந்துள்ளதாகவும், எதிரணி வேட்பாளர் டிரம்ப்பின் உரையை 25.3 மில்லியன் பேர் பார்த்திருப்பதாகவும் நீல்சென் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.