பாரிஸ் ஒலிம்பிக் பெருவிழா கண்கவர் நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இன்று (ஜூலை 26) தொடங்கியது.
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த 33வது ஒலிம்பிக் தொடரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொடக்கிவைத்தார்.
ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல் ஏந்திச் செல்கின்றனர்.
இந்த ஆண்டு ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியா சார்பில் துப்பாக்கிச்சுடுதல், தடகளம் உள்ளிட்ட 16 விளையாட்டுகளில் மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.