த்ரிஷா படத்தை வைக்க வேண்டும்.. மாமன்ற கூட்டத்தில் வெடித்த பிரச்சனை! கவுன்சிலர் கோஷம் | Trisha’s Photo Demand Sparks Protests at Karaikudi Council Meeting

Spread the love

Tamilnadu

oi-Halley Karthik

சிவகங்கை: கரைக்குடி மாமன்ற கூட்டத்தில், நடிகை த்ரிஷாவின் படத்தை வைக்க வேண்டும் என்று கவுன்சிலர் ஒருவர் கோரிக்கை வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

இன்று காலை வழக்கம்போழ காரைக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்கள் வார்டு தொடர்பான கோரிக்கையை வைத்தனர்.

Trisha s Photo Demand Sparks Protests

அப்போது 11வது வார்டு சுயேட்சை உறுப்பினர் மெய்யர், மாமன்ற கூட்டத்தில் த்ரிஷாவின் படத்தை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். “த்ரிஷா படத்தை வச்சே ஆகனும்.. ஆட்சிக்கு வர காரணமே அவங்கதான். எனவே அவங்க போட்டோவை வைக்கணும். அடுத்த சிஎம் அவங்கதான்” என்று மெய்யர் கூற..

த்ரிஷா படத்தை ஏன் வைக்க வேண்டும்? என மற்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

சென்னை மாநகராட்சி கூட்டம்

அதேபோல சென்னை மாநகராட்சி கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. இன்று காலை வழக்கம் போல கூட்டம் தொடங்கி உடன், தவெக அரசின் மீது விமர்சனங்களை அடுக்கியிருந்தார். மின் வெட்டு பிரச்சனையால் மக்கள் அவதியடைகிறார்கள் என்றும், இதுதான் தவெக அரசின் சாதனையா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். மேயரை தொடர்ந்து உறுப்பினர்கள் பேசுகையில் சலசலப்பு ஏற்பட்டது.

திமுக கவுன்சிலர்கள் பேசி முடித்துவிட்டு, அதிமுக உறுப்பினர்களிடம் மைக் கை மாறியது. மைக்கை வாங்கி பேசிய அதிமுக கவுன்சிலர் சதீஷ், திமுக உறுப்பினர்கள் தங்கள் தலைவரை புகழ்வதில் டைம் வேஸ்ட் செய்கிறார்கள். மக்கள் பிரச்சனையை பேசுவதற்காகத்தான மன்றம் இருக்கிறது. எனவே, மன்றத்தில் அதை மட்டும் பேச வேண்டும். நான் எங்கள் வார்டின் பிரச்சனையை பற்றி பேசத்தான் வந்திருக்கிறேன் என்று சொன்னார்.

உடனே குறுக்கிட்ட திமுக கவுன்சிலர்கள், உங்களுக்குத்தான் தலைவர்களே கிடையாதே என்று கூற.. இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *