த்ரிஷா போட்ட பதிவு: AI விஜய்யா? “00:00” என்றால் என்ன? – Kumudam

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் 52 ஆவது பிறந்தநாள் நேற்று முன் தினம் (ஜுன் 22) கொண்டாடப்பட்டது. நடிகர் டூ அரசியல்வாதி டூ முதலமைச்சராக மாறியுள்ள அவருக்கு திரையுலக பிரபலங்கள், தவெக தலைவர்கள், பிற அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கூட முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று எதிர்கட்சியான திமுகவை கடுமையாக சாடி, அவருக்கே உரித்தான Body Language உடனும், மாஸ் டைலாக்குடனும் இறுதியாக கதம் கதம்என்ற ஆக்ஷனுடனும் மாஸாக பேசினார்.

எங்க தலைவர வாயத் திறங்கனு சொன்னீங்க, அவரு பேசுனா உடனே எழுந்து போறீங்கஎன்றும், தாங்கள் செய்த தவறுகளை புட்டு புட்டு முதலமைச்சர் வைத்ததை பொறுத்துக் கொள்ள முடியாமலும் திமுக வெளிநடப்பு செய்ததாகவும் தவெகவினர் குற்றஞ்சாட்டுவதோடு, இணையத் தளத்தில் முதலமைச்சர் ஸ்பீச்சை தரமாக எடிட் செய்து ஃபயரெல்லாம் விட்டு வந்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் முடிந்த அடுத்த நாள், அதாவது சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதிலுரை ஆற்றிச் சென்ற அந்த நாள், நடிகை த்ரிஷா போட்ட பதிவு தவெகவினர் சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக அமைந்துள்ளதாக சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

த்ரிஷா வெளியிட்டுள்ள அந்த பிறந்தநாள் பதிவில், அனைத்துக்கும் தகுதியாக நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்என்று கூறியதோடு, “00:00” என்றும் பதிவிட்டு இருந்தார். அத்துடன், விஜய் 5 கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படத்தையும் த்ரிஷா பகிர்ந்துள்ளார்.

ஒருபக்கம், தனது பிறந்தநாளுக்காக தலைமைச் செயலக அதிகாரிகள் ஆர்டர் செய்த கேக்கை அம்மோனியா வாயு கசிவால் இறந்தவர்களுக்காக இந்த பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லைஎன்று கூறிய அதே முதலமைச்சர் தான் தனியாக தற்போது நடிகையுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளாரா என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மறுபக்கம், பாடகி சுசித்ரா போன்றோர், ’த்ரிஷா வெளியிட்டுள்ளது ஏஐ புகைப்படம் தான், உண்மையில் விஜய்யும் த்ரிஷாவும் பிறந்தநாளை கொண்டாடவில்லை… பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காகவே ஏஐயால் ஜெனரேட் செய்த புகைப்படத்தை த்ரிஷா பகிர்ந்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *