“நகைகள் vs காயின்..” அமீரகத்தில் இருந்து தங்கத்தை எடுத்து வர எது பெஸ்ட்! சட்டம் சொல்வது என்ன? | Gold Jewellery or Coins? Which is Cheap to Bring from UAE to India, Know the Rules before buying

Spread the love

Business

oi-Vigneshkumar

துபாய்: அமீரகத்தில் இருக்கும் இந்தியர்கள் அங்கும் சேமிப்பாக தங்கத்தை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இருப்பினும், அமீரகத்தில் தங்கத்தை காயின்களாக வாங்க வேண்டுமா அல்லது நகையாக வாங்க வேண்டுமா.. எப்படி வாங்கினால் ரிஸ்க் குறைவு, இந்தியாவுக்கும் எடுத்து வருவது ஈஸி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

UAE gold India

தங்கம்

இந்தியர்கள், குறிப்பாக தென்னிந்தியர்கள், பலரும் இப்போது வேலைக்காக அமீரகம் செல்கிறார்கள். அப்படி அமீரகம் செல்வோர் சேமிப்பிற்காக அங்கேயே தங்கம் வாங்குவார்கள். இந்தியர்களுக்குத் தங்கம் தான் பிரதான சேமிப்பாக இருக்கும் நிலையில், அங்கும் அதை தொடரவே செய்கிறார்கள். இந்தியாவை விட துபாயில் தங்கத்தின் விலை 12 முதல் 15 சதவீதம் வரை குறைவாக இருப்பதால், பலர் அங்கு தங்கம் வாங்க விரும்புகின்றனர். பலரும் தங்க காயின்களை வாங்குகிறார்கள்.

கவனம்

ஆனால் தங்கம் வாங்கும்போது தங்க காயின்களுக்கு பதிலாக நேரடியாக தங்க நகைகள் வாங்குவது அதிக பயன் தரும் என்று துபாயின் முன்னணி நகை வியாபாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக கலீஜ் டைம்ஸ் ஊடகத்திற்கு கன்ஸ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனில் தனக் கூறுகையில், “பலரும் தங்க காயின்களை வாங்கி, அதை மீண்டும் நகைகளாக மாற்றுகிறார்கள். இப்படி செய்யும்போது கூடுதல் செய்கூலி செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும், வெளிநாட்டிலிருந்து தங்கக் காசுகளை எடுத்துச் செல்லும்போது சில நாடுகளில் இதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் இருக்கும். இதற்கு பதிலாக நகைகளாக வாங்கலாம். நேரடியாக நகைகளை வாங்குவது பலருக்கும் வசதியாக இருக்கும். மேலும், செலவையும் கூட கணிசமாக குறைக்க முடியும்” என்றார்.

15% குறைவு

தற்போதைய தங்கம் விலை, வரிகள் மற்றும் கரன்சி ரேட் என எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால்.. துபாயில் வாங்கப்படும் தங்க நகைகள் இந்தியாவை விட சுமார் 12 முதல் 15 சதவீதம் வரை விலை குறைவாக இருப்பதாக நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமே இந்தியாவின் இறக்குமதி வரிகள் தான். இப்போது இந்தியாவில் தங்கத்திற்கு 15% இறக்குமதி வரி விதிக்கப்படும் நிலையில், அதுவே இந்தியா- அமீரகம் இடையேயான தங்கம் விலை மாறுபட முக்கிய காரணமாக இருக்கிறது.

நகைகளாக வாங்குவோருக்கு மட்டுமின்றி, முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தங்கம் வாங்குவோருக்கும் துபாயில் பல சூப்பர் திட்டங்கள் உள்ளன. குறிப்பிட்ட 24 கேரட் தங்க கட்டிகள் மற்றும் முதலீட்டிற்கு பயன்படும் தங்கத்திற்கு அமீரகத்தில் வாட் வரி எதுவும் விதிக்கப்படுவதில்லை. மேலும், சுற்றுலா பயணிகள் வாங்கும் சில பொருட்களுக்கு கூட VAT திரும்பப் பெறும் வசதியும் இருப்பதால் கூடுதல் சேமிப்பு கிடைக்கிறது.

ரூல்ஸ் என்ன

அதேநேரம் துபாயில் தங்கம் வாங்கிவிட்டு இந்தியா திரும்புவோர் இந்திய சுங்க விதிமுறைகளை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். 2026 மத்திய பட்ஜெட்டில் இது தொடர்பான புதிய ரூஸ்ஸ் அறிவிக்கப்பட்டன. அதன்படி பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளையும், ஆண்கள் 20 கிராம் வரை தங்க நகைகளையும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் சுங்க வரியின்றி இந்தியாவிற்கு கொண்டு வர அனுமதி உள்ளது.

இந்த விதிகளில் அவ்வப்போது மாற்றம் வரலாம் என்பதால். துபாய் செல்வதற்கு முன்பு இப்போது உள்ள சுங்க விதிமுறைகள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதாவது முதலீட்டிற்காக தங்கம் வாங்கும்போது ரேட் குறைவு என்றாலும் இந்தியாவுக்கு எடுத்து வரும்போது இறக்குமதி வரி செலுத்த வேண்டும். ஒரு கிராம் காயினாக இருந்தாலும் வரி இருக்கும். ஆனால், நகைகள் என்றால் மேலே குறிப்பிட்ட லிமிட் வரை வரை இல்லை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *