
சென்னையில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 2) அதிரடியாகச் சரிந்துள்ளது.
நேற்று, (செப்டம்பர் 1) மாதத்தின் தொடக்கத்தில், காலையில் தங்கத்தின் விலை “சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,15,080-க்கும்”, “கிராம் ரூ.14,385-க்கும்” விற்பனையானது. ஆனால், மாலை வேளையில் சந்தையில் மாற்றம் ஏற்பட்டு, “வரனுக்கு ரூ.1,680” வரை குறைந்தது. இதனால் நேற்றைய வர்த்தக முடிவில் “ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கும்”, “சவரன் ரூ.1,13,400-க்கும்” விற்பனை செய்யப்பட்டது.
அந்த வரிசையில், இன்றைய நாளின் தொடக்கத்திலேயே ஆபரணத் தங்கத்தின் விலை சரசரவெனச் சரிவைக் கண்டுள்ளது. “கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு” விற்பனையாகிறது. அதேபோல், “சவரனுக்கு ரூ.1,800 வரை குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,600” என்ற நிலையை எட்டியுள்ளது.
நேற்று காலையில் “கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.255-க்கு” விற்பனையான வெள்ளி, மாலையில் மேலும் “ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250-க்கு” வர்த்தகமானது. இன்றைய நிலவரப்படி, வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு “கிராம் வெள்ளி ரூ.250-க்கும்”, ஒரு கிலோ பார் வெள்ளி “ரூ.2,50,000-க்கும்” தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வருவதால், நகை வாங்குவோர் தினசரி விலை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.