நகை வாங்க போறீங்களா?..உங்களுக்கு BAD NEWS..தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? – Kumudam

Spread the love

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களோடு இருந்து வரும் நிலையில், கடந்து 25ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. அதன்படி கிராமுக்கு ரூ 10ம் பவுனுக்கு ரூ 80ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ 14,010க்கும், ஒரு சவரன் ரூ 1,12,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையில் நேற்று (29.09.2026) தங்கம் விலை சற்று குறைந்து. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 குறைந்து ஒரு சவரன் ரூ 1,09,120க்கும், கிராமுக்கு ரூ 25 குறைந்து ஒரு கிராம் ரூ 13,640க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கம் விலை

தொடர்ந்து குறைந்து வந்த  தங்கம் விலை இன்று ஏற்றத்தை கண்டுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,09,680 க்கும், கிராமுக்கு ரூ 70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 13,640 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 மற்றும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து, தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000 விற்பனை செய்யப்படுகிறது.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *