நடிகையின் ஃபிட்னெஸ் வீடியோக்கள்… தீவிர பயிற்சிகள் அவசியமா, ஆபத்தா? | Actress Jyothika’s fitness videos… Are intense workouts necessary or dangerous?

Spread the love

பிரபலங்கள் செய்கிற உடற்பயிற்சிகளைக் கண்மூடித்தனமாக நீங்களும் செய்தால், தேவையின்றி காயங்கள்தான் ஏற்படும். பல பிரபலங்களும் செய்கிற உடற்பயிற்சிகளைப் பார்க்கும்போது, தேவையில்லாமல், இவ்வளவு கடினமான வொர்க் அவுட்டுகளைச் செய்வதாகவே தோன்றுகிறது. அந்தப் பயிற்சிகளை எல்லாம் சாமானியர்கள் செய்தால் முதுகுப் பகுதியில் பிரச்னைகள் வரும். அப்படிப்பட்ட பயிற்சிகள் அவசியமும் இல்லை. 

பார்ப்பதற்குக் கடினமாகத் தெரிகிற உடற்பயிற்சிகள்தான் பலன் தரும், அப்படிச் செய்வதுதான் சரியானது என்ற எண்ணமே தவறு. உடற்பயிற்சி என்பதன் அர்த்தத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வீட்டில், தரையில் உள்ள பெட்டியையோ, பொருளையோ தூக்கி, பரணில் வைப்போம். அதுதான் ஜிம்மில் ‘ஓவர்ஹெட் ப்ரெஸ்’ என்ற பெயரில் செய்யப்படும்.

கீழிருந்து கனமான பொருளைத் தூக்குவதை, ஜிம்மில், ‘டெட் லிஃப்ட்’ என்ற பெயரில் செய்வீர்கள். அப்படி சாதாரணமாக வீட்டில் நாம் செய்கிற அசைவுகளைத்தான் உடற்பயிற்சிகளாக ஜிம்மில் செய்கிறோம்.

மிதமான ஜாகிங், வேகமான நடை போன்றவற்றை வாரத்தில் 3-4 நாள்கள் செய்யலாம்.

மிதமான ஜாகிங், வேகமான நடை போன்றவற்றை வாரத்தில் 3-4 நாள்கள் செய்யலாம்.
Lifestock

அந்தப் பயிற்சிகளைச் செய்யும்போது காயம் ஏற்படாமல், அடி படாமல் இருக்க வேண்டும் என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். உடற்பயிற்சியில் ‘ஹெச்ஐஐடி’ (High-Intensity Interval Training) என்று ஒரு பிரிவு உண்டு. அதாவது, 40 நொடிகள் ஜம்ப்பிங் ஜாக்ஸ் செய்தால், 20 நொடிகள் பிரேக் எடுப்பீர்கள். அடுத்து மீண்டும் 40 நொடிகளுக்கு மிதமான ஜாகிங் செய்வீர்கள். 20 நொடிகள் பிரேக் எடுப்பீர்கள். அதாவது உடற்பயிற்சியின் தீவிரத்தைக் குறைத்து, கூட்டி, ஓய்வெடுத்துச் செய்வது. இதில் இதயத்துடிப்பின் அளவானது எப்போதுமே சற்று அதிகமாகவே இருக்கும்.

வாரத்தில் 3 நாள்கள் ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளையும் (குறிப்பாக, பெண்களுக்கு 3-4 நாள்கள் இது அவசியம்) ஹெச்ஐஐடி பயிற்சிகளை வாரத்தில் ஒன்றிரண்டு நாள்களும் செய்யலாம். மிதமான ஜாகிங், வேகமான நடை போன்றவற்றை வாரத்தில் 3-4 நாள்கள் செய்யலாம். ஒருவேளை ஹெச்ஐஐடி பயிற்சிகளை வாரத்தில் 3 நாள்கள் செய்தால், ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற, உங்களுக்குத் தேவையான பயிற்சிகளைத் தெரிந்துகொண்டு செய்வதுதான் சரி. பிரபலங்களைப் பார்த்து எதையும் பின்பற்ற வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *