நட்சத்திரங்களின் துடிப்பில் பிரபஞ்சத்தின் தூரத்தை கண்டறிந்த அண்டவியலின் அமைதி புரட்சியாளர்! | The Quiet Revolutionary Who Measured the Vastness of the Universe

Spread the love

பூமியின் தென் அரைக்கோளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மகன்மதிக்கடல் விண்மீன் திரள் (Magellanic Clouds – பெரிய மற்றும் சிறிய மேகங்கள்) கூட்ட புகைப்படத் தகடுகளை ஆராய்ந்தார். லீவிட் அதில் மிக முக்கியமானவர். பிரபஞ்சத்தின் அளவையே மாற்றியமைத்த இந்த விஞ்ஞானிக்கு ஆரம்பத்தில் இந்தப் பணியில் ஒரு மணி நேரத்திற்கு வெறும் 25 சென்ட்டுகள் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டது. இந்த விண்மீன் திரள்களுக்குள் மட்டும் அவர் சுமார் 1,777 மாறும் விண்மீன்களைக் கண்டறிந்து, அவற்றின் பிரகாச மாறுபாடுகளைக் குறித்துக் கொண்டார்.

லீவிட், இரவு வானத்தில் பிரகாசம் தொடர்ந்து மாறும் செஃபீட் மாறும் விண்மீன்களைப் (Cepheid variables) பற்றி ஆய்வு செய்தார். விண்வெளியில் உள்ள சில நட்சத்திரங்களின் பிரகாசம்ஒரே சீராக இருக்காது. அவை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரகாசமாக மாறுவதும், பின்னர் மங்குவதுமாக இருக்கும். இந்த துடிப்புத் தன்மை கொண்ட நட்சத்திரங்களே செஃபீட் மாறும் விண்மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரே விண்மீன் திரளுக்குள் இருந்ததால், “இவை அனைத்தும் பூமியிலிருந்து தோராயமாக ஒரே தொலைவில்தான் இருக்க வேண்டும்” என்ற யூகத்தின் அடிப்படையில் நட்சத்திரத்தின் உண்மையான பிரகாசத்திற்கும், அது பிரகாசமாகி மங்குவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக் லீவிட் கண்டுபிடித்தார்.

நீண்ட காலம் (துடிப்பு நீளம்) எடுத்துக் கொள்ளும் நட்சத்திரங்கள் அதிக ஒளிர்திறன் (பிரகாசம்) கொண்டுள்ளன என்பதைக் கண்டறிந்தார். நட்சத்திரங்களின் இந்த துடிப்பு காலத்தை அளவிடுவதன் மூலம், பூமியிலிருந்து அவற்றின் உண்மையான தூரத்தை கணக்கிட முடியும் என்பதை நிரூபித்தார். லீவிட் கண்டறிந்த இந்த முறை (லீவிட் விதி) வானியலில் தொலைவுகளை அளக்கும் ஒரு “அளவுகோலாக” மாறியது.

லீவிட் தனது வாழ்நாளில் 2,400-க்கும் மேற்பட்ட மாறும் விண்மீன்களைக் (Variable stars) கண்டறிந்து பட்டியலிட்டார். இது அக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த மாறும் விண்மீன்களில் பாதியாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *