நம்பிக்கை வாக்கெடுப்பு: பெரும்பான்மையை நிரூபித்த தவெக; ‘முதல்வர்’ விஜய்க்கு பிரச்னையில்லை!|TVK and Vijay Passes Trust Vote in Tamilnadu Assembly

Spread the love

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் பெரும்பாலான தொகுதிகளை வழங்கியிருந்தாலும், பெரும்பான்மையை வழங்கவில்லை.

அதனால், தவெக இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தது.

தவெக மொத்தம் 107 தொகுதிகளில் வென்றிருந்தது. இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கால் சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி வாக்களிக்கவில்லை.

திருச்சி கிழக்கு தொகுதியை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துவிட்டார். அதனால், அந்தத் தொகுதி சார்பாக வாக்கு பதிவாகாது.

மதிமுக இருவர் இன்று சட்டமன்றத்திற்கு வரவில்லை.

தவெக விஜய் - JCD பிரபாகர்

தவெக விஜய் – JCD பிரபாகர்

திமுக வெளிநடப்பு செய்துவிட்டது. அதனால், வாக்கெடுப்பின் போது 59 எம்.எல்.ஏக்கள் ஆப்சென்ட். சபாநாயகர் வாக்களிக்கமாட்டார்.

ஆக, மொத்தம் 171 உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர்.

அதில் அரசுக்கு ஆதரவாக 144 பேரும், அரசுக்கு எதிராக 22 பேரும், நடுநிலையாக 5 பேரும் வாக்களித்தனர். அதிமுக சார்பில் 25 எம்.எல்.ஏக்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 22 எம்.எல்.ஏக்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

அதனால், பெரும்பான்மைக்கு தேவையான எண்களை விட அதிகமாக வாக்கு கிடைத்திருப்பதால், தவெக ஆட்சி தொடர்கிறது… தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் தொடர்கிறார்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *