நம்மளை டார்ச்சர் செய்வதற்கே கம்பீர் இப்படி செய்றாரு.. மீண்டும் சிராஜ்க்கு வாய்ப்பு மறுப்பு! | Gambhir added Prasidh Krishna as Concussion Substitute for Akash Deep and Again Siraj omitted

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தலையில் காயம் அடைந்த இந்திய வீரர் ஆகாஷ் தீப்பிற்கு கன்கசன் வீரராக பிரசித் கிருஷ்ணா களமிறக்கப்பட்டுள்ளார். கன்கசன் வீரராக கூட சிராஜ் களமிறக்கப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திறமை அடிப்படையில் சிராஜ் இந்திய அணியின் கடைசி ஆப்ஷனாக மாறிவிட்டதாக பார்க்கப்படுகிறது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 356 ரன்களை விளாசியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 2வது நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்களை எடுத்திருந்தது. இன்று நடந்து வரும் 3வது நாள் ஆட்டத்தில் துருவ் ஜுரெலின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 246 ரன்களை எட்டியது.

Gautam Gambhir

சிறப்பாக ஆடிய துருவ் ஜுரெல் 88 ரன்களை எடுத்தார். பேட்டிங்கின் போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் 52 பந்துகளில் 29 ரன்களை எடுத்தார். அப்போது ஆகாஷ் தீப் தலையில் பந்து அடித்து காயம் ஏற்பட்டது. இதனால் கன்கசன் கோரி இந்திய அணி மாற்று வீரராக பிரசித் கிருஷ்ணாவை பவுலிங் செய்ய களமிறக்கியது.

இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சிராஜ் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இதற்கே முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பினரும் கொந்தளித்தனர். தற்போது கடைசி இன்னிங்ஸிலும் கூட சிராஜ் ஒரு மாற்று வீரராக தேர்வு செய்யப்படவில்லை.

வழக்கமாக சிராஜின் பவுலிங் 2வது பவுலிங்கின் போது உச்சத்தில் இருக்கும். அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் வாய்ப்பே கிடைக்காததால் சிராஜ் தனது திறமையை நிரூபிக்க தீவிரமாக இருப்பார். அந்த வெறியை பயன்படுத்தும் வகையில் கம்பீர் வாய்ப்பு அளித்திருக்கலாம். ஆனாலும் கம்பீர் மீண்டும் பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

இந்த பிட்சில் பிரசித் கிருஷ்ணா பவுலிங் எடுபடாது என்பதால் தான் அவர் பெஞ்ச் செய்யப்பட்டார். ஆனால் திடீரென கன்கசன் வீரராக களமிறக்கப்பட்ட பின் அவரை புதிய பந்தில் பவுலிங் செய்ய வைத்திருப்பதற்கு பின் என்ன திட்டம் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. அதேபோல் இந்திய அணியின் நம்பர் 1 பவுலரான சிராஜ், திடீரென பும்ரா, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, அன்சுல் கம்போஜ் மற்றும் குர்னூர் ப்ரார் ஆகியோருக்கு பின் நிற்க வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *