நயாரா எனர்ஜி அதிரடி.. பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹5 குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு ₹3 குறைப்பு | Nayara Energy reduces petrol price by ₹5 per litre and diesel price by ₹3 per litre

Spread the love

Business

oi-Velmurugan P

சென்னை: ரஷ்யாவின் ‘ரோஸ்நெப்ட்’ மற்றும் ‘டிராஃபிகுரா’ கூட்டமைப்புக்கு சொந்தமாக இந்தியாவில் ‘நயாரா எனர்ஜி’ நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் ‘நயாரா எனர்ஜி’ தனது பங்குகளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹3 குறைத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் தணிந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததைத் தொடர்ந்து இந்த விலை குறைப்பை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் பதற்றம் தணிந்ததால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், முக்கிய கடல்வழிப் போக்குவரத்துப் பாதை மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகம் நாடு முழுவது்் சீராகியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தட்டுப்பாடு நீங்கி, எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது.

Nayara Energy reduces petrol price by 5 per litre and diesel price by 3 per litre

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 73.25 முதல் 73.51 அமெரிக்க டாலர் வரை வர்த்தகம் ஆகிறது. அதேபோல் டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் ஒரு பேரல் 69.81 முதல் 70.12 அமெரிக்க டாலர் வரை வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் தோராயமாக ₹6,669 என்ற அளவில் வர்த்தகமாகிறது. தற்போது ஈராஸ் இஸ்ரேல் உள்பட மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் தணிந்து, கடல்வழிப் போக்குவரத்து சீராகி உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கச்சா எண்ணெய் விலை சுமார் 23% முதல் 25% வரை சரிவடைந்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியபோது விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தின. விலை குறைந்த உடன் அதே வேகத்தில் விலை குறைக்கவில்லை. எப்போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் என்பது குறித்து மத்திய அரசும் கூறவில்லை.

இந்த சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனங்களில் ஒன்றா நயாரா பெட்ரோல் பங்குகள் நிறுவனம் தனது பங்குகளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹3 குறைத்துள்ளது. இந்த புதிய விலை குறைப்பு, நாடு முழுவதும் உள்ள அதன் 7,000-க்கும் மேற்பட்ட பங்குகளில் இன்று (ஜூலை 1 ) முதல் அமலுக்கு வந்துள்ளது. மாநிலங்களின் உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப பங்குகளின் உண்மையான சில்லறை விலை மாறுபடும் என்று நயாரா நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் நாட்டின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ள அரசு பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் , பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பெட்ரோ லிட்டருக்கு ₹107.76க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு ₹99.55 க்கு விற்பனையாகிறது. மற்ற ஊர்களில் சற்றே மாறுபடும்.

முன்னதாக, ஈரான் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தபோது, கடந்த மார்ச் 26 அன்று நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை ₹5-மும், டீசல் விலையை ₹3-மும் உயர்த்தி இருந்தது. அதன் பின்னர் மே மாத பிற்பாதியில் அரசு பொதுத்துறை நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை தலா ₹7.50 வரை உயர்த்தியிருந்தன. தற்போது நயாரா நிறுவனம் மார்ச் மாதம் உயர்த்திய விலையை அப்படியே குறைத்துள்ளது . நயாரா நிறுவனம் குஜராத்தின் வாதினாரில் ண்டுக்கு 20 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இயக்கி வருகிறது. தற்போது பராமரிப்புப் பணிகள் முடிந்து, நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய இந்நிறுவனம் முழுமையாகத் தயாராக இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *