கடுமையான அந்தப் போட்டியில் நரேந்தர் பெர்வால் வெற்றி பெற்றார். இருப்பினும், போட்டியில் இருவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டதால், தையல் போடுவதற்காக இருவரும் ஒன்றாக மருத்துவமனைக்குச் சென்றனர். அப்போது பாகிஸ்தான் வீரர் பெர்வாலிடம், ‘தம்பி, நான் ஒன்று சொல்லட்டுமா?’ என்று கேட்டிருக்கிறார். பெர்வாலும் ‘சொல்லுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த பாகிஸ்தான் வீரர், ‘உன் பெயர் நரேந்தர், உனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளரின் பெயர் நரேந்திர ராணா… உங்கள் நாட்டின் பிரதமரின் பெயர் நரேந்திர மோடி… இப்போது எனக்கு ‘நரேந்திர’ என்ற பெயரைக் கேட்டாலே வெறுப்பாக இருக்கிறது’ என்று விரக்தியுடன் கூறியிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தை நரேந்தர் பெர்வால் பிரதமர் மோடியிடம் விவரித்தபோதுதான், பிரதமர் மோடியால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் உரக்கச் சிரித்திருக்கிறார்.