நவம்பர் 30, டிசம்பர் 30-ம் தேதிக்குள் என்னென்ன செய்ய வேண்டும்? | Don’t Miss These Year-End Deadlines: PAN, ITR, Pension!

Spread the love

இந்த ஆண்டின் இறுதி மாதத்தை நெருங்கிவிட்டோம். சில நடைமுறைகளுக்கும் இறுதி நாள்கள் நெருங்குகின்றன. அவை என்னென்ன என்பதை வரிசையாக பார்த்துவிடலாமா?

1. பான் – ஆதார் இணைப்பு: வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைத்துவிட வேண்டும். இல்லையென்றால், 2026-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி முதல் பான் கார்டு செல்லுபடியாகாமல் போய்விடும்.

பான் - ஆதார் இணைப்பு

பான் – ஆதார் இணைப்பு

2. தாமத ஐ.டி.ஆர் ஃபைலிங்: கடந்த செப்டம்பர் 16-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லையா? பரவாயில்லை. 2024-25 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்குத் தாக்கலை “தாமத வருமான வரிக் கணக்குத் தாக்கலாக’ செய்யலாம். ஆனால், இந்தக் கணக்குத் தாக்கலுக்கு அபராதம் உண்டு மக்களே.

3. வருமான வரித் தணிக்கை செய்ய: தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ‘வரித் தணிக்கை’ செய்வதற்கான தேதி இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதியில் இருந்து டிசம்பர் 10-ம் தேதி என மாற்றப்பட்டுள்ளது. இதை விரைவில் முடிப்பது நல்லது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *