நாகப்பட்டினம்: ரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத் கடத்தல்; சிக்கிய தவெக நிர்வாகி; 4 பேர் கைது | Nagapattinam: 135 kg of methamphetamine worth Rs 270 crore seized; TVK functionary among 4 arrested

Spread the love

தவெக நிர்வாகி பூபாலன் மாவட்டச் செயலாளர் சுகுமாறனுக்கு நெருக்கமானவர். இவர் மீது கடத்தல் சர்ச்சைகள் எழுந்த நிலையிலும் சுகுமாறன் கண்டுகொள்ளவில்லை. சுகுமாறனுக்குச் சில செலவுகளை பூபாலன் செய்து கொடுத்ததால் அவரது நடவடிக்கையைக் கண்டு கொள்ளவில்லை என்கிறார்கள்.

பூபாலனின் நண்பர் சுகன் வேளாங்கண்ணியில் உள்ள விடுதி ஒன்றை லீஸ்க்கு எடுத்து நடத்தி வந்தார். ஏற்கனவே பூபாலனுக்குக் கடத்தலில் நல்ல லிங்க் உள்ளது. இவரது மனைவி பிரேமியா மூலமாக ஸ்கெட்ச் போட்டு கடத்தலில் ஈடுப்பட்டார் என்கிறார்கள்.

பின்னர், சுகன் உள்ளிட்டவர்களைக் கூட்டு சேர்த்து கொண்டு லாட்ஜில் வைத்து திட்டம் போட்டு மெத் கடத்தியுள்ளார் பூபாலன். தற்போது 135 கிலோ மெத் கடத்தலுக்குத் திட்டம் போட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் களத்தில் இறங்கினர்.

இதில் கடத்துவதற்காக சுகன் வீட்டில் இருந்த 135 கிலோ மெத், கத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், டூவீலர் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்தனர். பூபாலன் வீட்டில் இருந்தும் மெத் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் அடிபட்டு வரும் சுகுமாறன் கடத்தலில் ஈடுப்பட்டவரை கட்சியில் பொறுப்பு வழங்கி தன் விசுவாசியாக வைத்திருந்ததும் விமர்சனமாகியிருக்கிறது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *