நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (ஏப்ரல். 16) கூடியிருக்கிறது.
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு திருத்த மசோதாக்களை நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர். அதேசமயம் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி டி.ஆர் பாலு, “திமுக இந்தத் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கிறது.