ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்த அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பலம் இல்லாததால், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே, தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாலேயே, மழைக்காலக் கூட்டத்தொடரை முறையாக முடிக்காமல் வைத்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. புதிய கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டுமானால் குறைந்தபட்சம் 14 நாள்கள் முன்னறிவிப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதியே குளிர்காலக் கூட்டத்தொடருக்கான தேதிகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் குளிர்காலக் கூட்டத்தொடருக்கான தேதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டும் மத்திய அரசு – கவனம் பெறுவது எதனால்?!