நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ” மகளிர் நலனுக்காவே மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்.
தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்று நான் கையெழுத்திட்டு தருகிறேன். நாட்டை தெற்கு வடக்கு என்று பிரிப்பதை ஏற்க முடியாது. பிரிவினை அரசியல் இங்கு எடுபடாது. மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசு எவ்வித பாகுபாட்டையும் பார்க்கவில்லை.