தவெக அரசின் அமைச்சரவையில் பாமக இணையப்போவதாகவும், சௌமியா அன்புமணிக்கு முக்கியமான துறை ஒதுக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியானது.
குறிப்பாக, மதுராந்தகத்தில் கணிசமான அளவில் வன்னிய சமுதாய மக்கள் இருக்கின்றனர். இவர்களின் வாக்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். அதனால் திரைமறைவில் “தவெகவுக்கு நட்பு சக்தியாகவே இருங்கள். சரியான சமயத்தில் உங்களுக்கான உரிய கௌரவத்தை முதல்வர் செய்வார்’ எனத் தவெக தரப்பில் பாமகவுக்கு உறுதி கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதன் பின்னரே இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை எனும் முடிவை பாமக எடுத்தது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், செஞ்சியில் எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, பா.ம.க-வின் பூரண மதுவிலக்கு பேரணியில் ‘கள்’ இடம்பெறுமா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். பா.ம.க-வின் கொள்கை என்னவோ, அதைத்தான் நாங்கள் எப்போதும் வலியுறுத்துகிறோம்.
கள் தொடர்பான நிலைப்பாட்டை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கொள்கை விளக்கத்தில் தெளிவாகக் கூறியிருப்பார். அதுவே எங்கள் நிலைப்பாடு.