“நான் ஒரு தீவிர விஜய் ரசிகன் என்பதால்…” – நடிகர் ஜெய் | “Since I am an ardent Vijay fan…” – Actor Jai

Spread the love

பிரபல இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாபு விஜய். இவர் தற்போது நடிகர் ஜெய்யை வைத்து ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற புதிய படத்தை இயக்கியிருக்கிறார். இதில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் ஜெய், “என் நெஞ்சில் குடியிருக்கும்… இப்படி எந்த மேடையிலாவது பேச வேண்டும் என ஆசை. என்னிடம் எனக்கு பிடித்த இயக்குனர் யார் என்று கேட்டால் எப்போதுமே தான் சொல்லும் ஒரே பெயர் ஏ.ஆர். முருகதாஸ் தான்.

நடிகர் ஜெய்

நடிகர் ஜெய்

அவருடைய படங்களில் நடிக்கும்போது அவருடைய குணாதிசயங்களையும் பழக்கவழக்கங்களையும் நான் கவனித்துப் பின்பற்றுவேன். எங்கேயும் எப்போதும் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர். முருகதாஸ் சார்தான். அவர் அந்தப் படத்தின் ஷூட்டிங் போது ஒன்று கூறினார். அதை இப்போதும் நான் பின்பற்றுகிறேன். “ஷூட்டிங் சமயத்தில் சீக்கிரம் தூங்குங்கள், இல்லையென்றால் கண்ணுக்குக் கீழ் வரும் கரு வளையங்களை மறைக்க மேக்கப் போட வேண்டியிருக்கும், அது ஒளிப்பதிவாளரின் வேலையையும் பாதிக்கும்’ எனச் சொன்னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *