‘பாரதி கண்ணம்மா’ தொடரின் மூலம் நன்கு பரிச்சயமானவர் நடிகை கண்மணி.
இவருக்கும் சன் டிவியின் தொகுப்பாளர் அஷ்வத் சந்திரசேகருக்கும் நேற்று சென்னையில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. ‘பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து விலகிய பிறகு கண்மணி ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘அமுதாவும் அன்னலட்சுமி’யும் தொடரில் நாயகியாக கமிட் ஆனார். அந்தத் தொடர் அவருக்கென ஒரு தனி அடையாளத்தைத் தந்தது. அஷ்வத் சன் டிவியில் ‘வணக்கம் தமிழா’ தொடரில் தொடங்கிப் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இருவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இரு வீட்டுப் பெரியவர்களின் சம்மதத்துடனும் ஊடக நண்பர்களின் முன்னிலையிலும் இவர்களுடைய நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. சின்னதிரை பிரபலங்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். பலரும் ‘ஃபைனலி’ என்கிற கேப்ஷனுடன் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
அஷ்வத் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் நிச்சயதார்த்த நிகழ்வில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை `நான் தான் இங்கே விசிறி’ என்கிற கேப்ஷனுடன் பதிவிட்டிருக்கிறார்.
வாழ்த்துகள் கண்மணி – அஷ்வத்