நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகவுள்ளது.
நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகராக இருந்தாலும் அஜித்குமார் தனி வாழ்க்கையின் மீதும் மிகுந்த கவனத்துடன் இருப்பவர். படப்பிடிப்பு, படத்தின் வெளியீடு என ஒருபக்கம் தன் உழைப்பைக் கொடுத்தாலும் மறுபுறம் குடும்பம், பயணம் என சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல் வாழ்ந்து வருகிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களிலும் தீவிரமாக நடித்து வருகிறார்.
0️⃣7️⃣:2️⃣1️⃣ PM#EffortsNeverFail
— Lyca Productions (@LycaProductions) August 11, 2024
இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் ஹைதராபாத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனால், நாள் ஒன்றுக்கு 21 மணி நேரங்கள் அஜித் படப்பிடிப்பிலேயே இருக்கிறாராம்.
அதேநேரம், விடாமுயற்சி படத்தின் அப்டேட் அடிக்கடி வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு 7.21 மணிக்கு அடுத்த அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது, படத்தின் புதிய போஸ்டராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.