இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசியிருக்கிறார்.

“நான் வைபவிடம் பெரும்பாலும் கிரிக்கெட் அல்லாத விஷயங்களைப் பற்றித்தான் பேசுவேன்.
ஏனென்றால் எல்லோரும் அவரிடம் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.
அவரது குடும்பம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து பேசும்போது அவர் மிகவும் உற்சாகமாகவும் இயல்பாகவும் இருக்கிறார்.