"நான் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது" – முதல்வர் விஜய்

Spread the love

சட்டமன்றக் கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று (ஜூன்.23) நடைப்பெற்றது. கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் பதிலுரை ஆற்றினார். எப்போதும் ஆடியோ லான்ஜிலும், பிரசார மேடைகளிலும் குட்டி ஸ்டோரி சொல்லும் விஜய், இன்று சட்டமன்றத்திற்குள்ளும் குட்டி ஸ்டோரி சொல்லியிருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி

”எனக்கு ஒரு குட்டிக்கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு ஊர்ல பெரியவர் ஒருத்தர் ரொம்ப வெளியில் அடிக்குதுன்னு கண்ணுக்கு மேல கை வச்சு சுத்திக்கிட்டு இருந்தாராம். கூட இருந்த சின்ன பையன், ‘என்ன வேணும், என்ன தேடிட்டு இருக்கிங்க’ன்னு கேட்டானாம்.

‘அது ஒன்னும் இல்ல தம்பி உங்க அப்பா இங்க இருக்காரு’ன்னு சொன்னாங்க அவரைத்தான் தேடிட்டு இருக்கேன். எங்க அவரைக் காணோம் அப்படின்னு கேட்ருக்காரு அந்த பெரியவர். எங்களுக்கும் இந்த மாதிரி சம்பந்தம் இல்லாத கதையெல்லாம் பேச தெரியும். தப்பா எடுத்துகாதீங்க கதையில அந்த பெரியவர் அப்படி கேட்டிருக்காரு…

உதயநிதி ஸ்டாலின் உரை
உதயநிதி ஸ்டாலின் உரை

அதனால் யாரும் இங்கு டென்ஷன் ஆக வேண்டாம். பேசு பேசு என்கின்றனர். நான் வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது” என்று சட்டமன்றத்திற்குள்ளும் குட்டி ஸ்டோரி சொல்லியிருக்கிறார் முதல்வர் விஜய்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *