‘வெளிநாட்டிலிருந்து யார் உதவி பெறுகிறார்கள்?’ என்று மத்தியில் இந்தியப் பிரதமர் மோடி vs மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
வெளிநாட்டு உதவி குறித்து விவாதிக்க மோடிக்கு நேரடியாகச் சவால் விடுத்திருந்தார் ராகுல் காந்தி. நேரம் மற்றும் இடத்தையும் கூறுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
நிர்மலா சீதாராமன் சாடல்
ராகுல் காந்திக்குப் பதிலடி தருவதுபோல, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘விவாதத்திற்கு நாடாளுமன்றம் இருக்கிறது. ஆனால், அங்கே எதிர்க்கட்சிகள் விவாதிக்காமல், அவையை இழுத்தடிக்கிறார்கள்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், ‘காங்கிரஸ் தலைவரின் இல்லத்தில் நீங்கள் சமீபத்தில் மாதிரி நாடாளுமன்றம் நடத்தியிருந்தீர்கள்’ என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல் காந்தி இல்லத்தில் நடந்த இந்தியா கூட்டணியின் கூட்டத்தைச் சாடியிருந்தார்.
மாணிக்கம் தாகூர் பதில்
நிர்மலா சீதாராமனின் இந்தப் பதிவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர், “நிர்மலா ஜி, உண்மைகளை முதலில் தெரிந்துகொள்வோம்.
முதலாவதாக, அது ஒன்றும் மாதிரி நாடாளுமன்றம் அல்ல. அது ஞானேஷ் குமார் மீது, அரசியலமைப்பு சார்ந்த கண்ணியத்துடனும் தீவிரத் தன்மையுடனும் நடத்தப்பட்ட ஒரு பகிரங்கப் பதவிநீக்க விசாரணை நடவடிக்கை.
அதில் நாடாளுமன்றத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயல் எதுவுமில்லை.