மாணவர்களின் வசதிக்காகவும், அவர்களின் நெருக்கடியையும் கருத்தில் கொண்டு தேர்வு நேரத்தை 15 நிமிடங்கள் நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுக்கான நுழைவு அட்டைகள் ஜூன் 14 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்.
மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக மாநில அரசுடன் ஆலோசனை நடத்தப்படும்.

இந்த முறை தேர்வெழுதும் மாணவர்களின் போக்குவரத்துச் சிரமத்தைக் குறைக்க நானும் அனைத்து மாநில முதல்வர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.
ஜூன் 21 ஆம் தேதி வானிலை மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் தேசிய முகமைத் தேர்வு பரிசீலித்து வருகிறது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படும். ஓ.எம்.ஆர் தேர்வுத்தாள் முறையைவிட கணினி வழித்தேர்வு முறை ஒப்பீட்டளவில் சிறந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.