நூலக நூல் கொள்முதல் ஊழல்:“அரசுப் பணத்தைத் திட்டமிட்டுச் சூறையாடும் நோக்கில்…” – சிபிஎம் சண்முகம்| Corruption: “With the deliberate intent to plunder public funds…” – CPM Shanmugam

Spread the love

ஒருபுறம் பொதுமக்களின் வரிப்பணம் சூறையாடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மறுபுறம் அறிவுக்கு ஒவ்வாத உள்ளடக்கங்களைக் கொண்ட நூல்கள் தயாரிக்கப்பட்டு, அவை நூலகத்தில் இடம்பெற்றுள்ளதன் மூலம் அறிவுத் தளத்திலும் மோசடி அரங்கேறியுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்ச் சமூகத்தை அறிவாார்ந்த திசையில் வழிநடத்த வேண்டிய நூலகத்திலேயே இத்தகைய அறிவு மோசடி நடைபெற்றிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

எனவே, பெரியார் அறிவுலக நூலகத்திற்கான நூல்களைத் தேர்வு செய்யப் பரிந்துரைத்த குழுவில் இடம்பெற்றவர்கள் யார் ? இத்தகைய தரமற்ற, போலியான நூல்களை வாங்குவதற்கு அவர்கள் எவ்வாறு ஒப்புதல் அளித்தனர் ? இந்த முறைகேடுகளுக்குத் துணைபோனவர்கள் யார் ? எப்போது டெண்டர் விடப்பட்டது ?

எப்போது கொள்முதல் செய்யப்பட்டது ? உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு மக்கள் மன்றத்தில் வெளிப்படையாகப் பதிலளிப்பதே பொருத்தமானது. அரசு உடனடியாக தமிழ் அறிஞர்கள் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும், நூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்கள் அனைத்தையும் ஆராய்ந்து போலியானவை என உறுதிப்படுத்தப்படும் நூல்களை உடனடியாக நீக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு புலன் விசாரணைக்குழு ஒன்றை அமைத்து முறைகேடுகள், மோசடிகளைக் கண்டறிந்து அவற்றிற்கு காரணமான அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *