நேபாள வெள்ளம் தரும் வார்னிங்.. அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! | Nepal’s Glacial Lake Outburst Sends Warning to India – Climate Scientists Sound Alarm

Spread the love

International

oi-Halley Karthik

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்டிருக்கும் திடீர் வெள்ளம், ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை அடித்து சென்றிருக்கிறது. இந்த வெள்ளத்திற்கான காரணத்தை விளக்கியுள்ள ஆய்வாளர்கள், அடுத்து நேரப்போகும் ஆபத்தையும் எச்சரித்துள்ளனர். இதனால் இந்தியா உஷாராக இருக்க வேண்டியுள்ளது.

நேபாளத்தில் இன்று மதியம் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளம் சுனாமி மாதிரி மொத்த ஊரையும் வாரி சுருட்டி சென்றிருக்கிறது.

Nepal s Glacial Lake Outburst

என்ன நடந்தது?

நேபாளத்தின் திபெத் எல்லை அருகே வடக்கு ரசுவா பகுதியில் இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. திபெத் பகுதியில் பனிப்பாறைகள் உருகி, போட் கோஷி ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததுதான் இந்த திடீர் வெள்ளத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. 60க்கும் அதிகமான வீடுகள், இரும்பு பாலங்கள், சாலைகள், லாரி போன்ற கனரக வாகனங்கள் அனைத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கிறது. மொத்தம் 1000க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

எப்படி நடந்தது?

நேபாளத்தின் ரசுவா மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள திபெத் பகுதியில் மிக அதிக உயரத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகியதாலும், பனி ஏரி உடைந்ததாலும் இன்று காலை சுமார் 9.15 மணியளவில் தண்ணீர் திடீரென ரசுவாவுக்குள் புகுந்தது. திபெத்திலிருந்து நேபாளத்திற்குள் பாயும் போட் கோஷி ஆற்றில் இந்த நீர் வரத்து கலந்ததுதான் பேரழிவுக்கு காரணம். ஆற்றின் நீர் மட்டம் ஒரு சில நிமிடங்களில் 8-10 உயரம் வரை அதிகரித்தது. இவ்வளவு அதிகமான தண்ணீர் குறுகிய பாதைக்குள் பாய்ந்ததால்.. அது கட்டாறு வெள்ளமாக மாறியது.

காட்டாறு வெள்ளம்

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், சாதாரணமாக பனி உருகினால் இவ்வளவு பெரிய வெள்ளம் வராது. நேபாளத்தில் நடந்து பனி ஏரி வெடிப்பு. பனிப்பாறைகள் உடைந்து வெடிக்கும்போதுதான் இப்படியான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சாதாரணமாக பனி உருகும்போது அந்த நீர் சட்டென கீழே வராது. மலையின் சரிவுகளில் உள்ள பள்ளங்கள், மண், கூழாங்கற்கள் மற்றும் பனிக்கட்டிகளால் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும். இந்த தடுப்புகள் அனைத்தும் பலவீனமானவை. எப்போது வேண்டுமானாலும் உடையலாம்.

பிரச்சனை என்னவெனில், காலநிலை மாற்றம் காரணமாக பனி வேகமாக உருகினால், இந்த தடுப்புகளால் அதை தாங்க முடியாது. ஒரு தடுப்பு உடைந்ததும்.. அடுத்தடுத்த தடுப்புகள் உடைய தொடங்குகின்றன. கடைசியாக இது பேரழிவை ஏற்படுத்துகிறது. நேபாளத்தில் நடந்தது இதுதான்.

இந்தியாவுக்கு எச்சரிக்கை

இந்தியாவிலும் இப்படி பனி ஏரி வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று இஸ்ரோ எச்சரித்துள்ளது. இந்தியாவில் உள்ள இமலைய மலை பகுதிகளில் மொத்தம் 2485 பனி ஏரிகள் இருக்கின்றன. இந்த ஏரிகளில் 56 மிக மோசமானவை என்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இமாச்சலப் பிரதேசத்தில்தான் மிக அதிக அளவில் ஆபத்தான ஏரிகள் இருக்கின்றன என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அடையாளம் கண்டிருக்கிறது. எனவே இந்தியாவும் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *