நைட் ஷிஃப்ட் வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையா? | Is it true that working night shifts causes diabetes?

Spread the love

ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 7 மணி நேரத்தை ஓய்வுக்கு, அதாவது தூக்கத்துக்குக் கண்டிப்பாக ஒதுக்க வேண்டியது அவசியம். இரவைப் பகலாக்குபவர்கள், பகலை இரவாக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நைட் ஷிஃப்ட் மட்டும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் தங்கள் படுக்கையறையை சவுண்ட் ப்ரூஃப் (Sound-proof) மற்றும் லைட் ப்ரூஃப் (Light-proof) ஆக அமைத்துக் கொள்ள வேண்டும்.

வெளியில் எவ்வளவு வெயில் அடித்தாலும் அறை இருட்டாகவும், பக்கத்து வீட்டில் பாட்டு அல்லது டிவி சத்தம் கேட்டாலும் அறைக்குள் வராதவாறும் வைத்துக்கொள்ள வேண்டும். 7 மணி நேரத் தூக்கம் அவசியம் என்பதால், “என்னை எழுப்பாதீர்கள்’ என்று வீட்டில் உள்ளவர்களிடம் எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

வேலைக்குப் போகும்போதும், வேலையில் இருக்கும்போதும், வேலையை முடித்து வரும்போதும் சரியான கணக்கு வைத்துச் சாப்பிட வேண்டும். எந்த வேளை உணவையும் தவறவிடக்கூடாது. ஆரோக்கியமாகச் சாப்பிட வேண்டியது அதைவிட முக்கியம். சரியான முறையில் சாப்பிட்டுத் தூங்கினால் சர்க்கரை நோய் வராது.

இரவில் வேலை பார்ப்பதால் அதிகமாகச் சாப்பிட்டு, பகலிலும் சாப்பிட்டு உடல் எடை கூடாமல் (Weight gain) பார்த்துக்கொள்ள வேண்டும்.

இரவில் வேலை பார்ப்பதால் அதிகமாகச் சாப்பிட்டு, பகலிலும் சாப்பிட்டு உடல் எடை கூடாமல் (Weight gain) பார்த்துக்கொள்ள வேண்டும்.

தூக்கமே இல்லாமல் 3 மாதங்கள் இருக்கும் ஆண்களுக்கும், 6 மாதங்கள் தூங்காத பெண்களுக்கும் சர்க்கரை நோயோ அல்லது ரத்த அழுத்தமோ (BP) வர வாய்ப்புள்ளது. எனவே, தூக்கம் பாதிக்காதவாறு வேலையைப் பார்த்துக்கொள்வது நல்லது.

நைட் ஷிஃப்ட் போவதால் பகல் முழுவதும் 8 முதல் 12 மணி நேரம் உபரியாகக் கிடைத்தது போல எண்ணி, காலையில் எழுந்தவுடன் வேறு வேலைக்குப் போவது, ஆபீஸ் போவது, அல்லது மற்றொரு வேலையைத் தேடுவது போன்றவற்றைச் செய்யக்கூடாது. 8 முதல் 10 மணி நேரம் இரவில் உழைக்கும் பட்சத்தில், 7 மணி நேரம் தொடர்ந்து தூங்குவது நல்லது. 

அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் 4 மணி நேரம், 3 மணி நேரம் எனப் பிரித்துத் தூங்கலாம். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி (Exercise) செய்ய வேண்டும்.

இரவில் வேலை பார்ப்பதால் அதிகமாகச் சாப்பிட்டு, பகலிலும் சாப்பிட்டு உடல் எடை கூடாமல் (Weight gain) பார்த்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியோடு இருந்தது என்றால், வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோயும் வராது. உயர் ரத்த அழுத்தமும் வராது.

டாக்டர் அருணாசலம்:

32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பொது மருத்துவரான டாக்டர் அருணாசலம், சென்னை கே.கே.நகரில் அருண் விஜயா மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். 1994-ல் யு.எஸ்.எஸ்.ஆரின் மின்ஸ்க் அரசு மருத்துவக் கல்லூரியில் MD பட்டம் பெற்ற இவர், இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) உறுப்பினராக இருக்கிறார்.

பொது மருத்துவம், வளரிளம் பருவத்தினருக்கான மருத்துவம் மற்றும் தடுப்பு மருத்துவம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *