ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வேட்பாளர்களை நிராகரிப்பதும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா. இந்த நோட்டா எப்படி அமலுக்கு வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவில் 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குப் பிறகு, தேர்தல் ஆணையம் நோட்டாவை அறிமுகப்படுத்தியது.
இதற்கு முன்பு, ஒரு வாக்காளர் தனது வாக்கை யாருக்கும் அளிக்க விரும்பவில்லை என்றால் “49-O’ என்ற விதியின் கீழ் தேர்தல் அதிகாரியிடம் படிவம் பெற்றுப் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் இந்த நடைமுறை வாக்காளரின் தனியுரிமையைப் பாதிக்கிறது என அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.