ஈரான் போரில் அடிக்கடி மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இதன் விளைவாக, பங்குச்சந்தையில் ஒரு நாள் ஏற்றம், ஒரு நாள் இறக்கம் என இருந்துகொண்டு இருக்கிறது.
உதாரணத்திற்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது… அது நன்றாகச் சென்றுகொண்டிருக்கிறது என்று கூறினால், அன்று பங்குச்சந்தையில் ஏற்றம் இருக்கிறது.
அடுத்த நாள், “இல்லை… இல்லை… ஈரானுடன் போர் தொடர்கிறது’ என்று கூறினால், மீண்டும் பங்குச்சந்தை சரிகிறது.

“இது டிரேடிங்கிற்கான சந்தை. இந்த 23,600 – 24,041 ரேஞ்சை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இதற்குள் பங்குகளை வாங்குவது, விற்பது நல்லது.
மேலே குறிப்பிட்ட ரேஞ்சிற்குள் சந்தை இருக்கும் போது, எந்தப் பிரச்னையும் இருக்காது. சந்தையில் எந்த மாற்றமும் பெரியளவில் இருக்காது.
ஆக, இந்த ரேஞ்சிற்குள் டிரேடிங் செய்வது நல்லது… ஓரளவு பாதுகாப்பானதும் கூட”.