சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஒரு தனியார் ஐடி நிறுவன ஊழியர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் ஆர்வமாக முதலீடு செய்து வருகிறார். கடந்த வாரம் ஒருநாள் காலை, காபி குடித்துக்கொண்டே மொபைலைத் திறந்தவருக்குப் பேரதிர்ச்சி. பங்குச் சந்தை அன்று 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்திருந்தது. ரமேஷின் போர்ட்ஃபோலியோவில் இருந்த லாபம் அனைத்தும் கரைந்து, சிவப்புக் கோடுகள் தெரிந்தன. பதற்றமான ரமேஷ், உடனே தன் நண்பருக்கு போன் செய்து, “மச்சான்… எல்லாத்தையும் வித்துட்டு வெளில வந்துடலாமா?” என்று கேட்டார்.
இது ரமேஷின் கதை மட்டுமல்ல; இன்று சந்தை ஏறி இறங்கும் போதெல்லாம் லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் மனதில் எழும் ஒரு சந்தேகம்.

சந்தை சரிவு என்பது ஆபத்தா? அல்லது வாய்ப்பா?
பங்குச் சந்தை என்பது எப்போதும் ஒரே சீராகச் செல்வதில்லை. ஏற்றமும் இறக்கமும் அதன் இயல்பு. ஆனால், சந்தை இறங்கும்போது பயந்துபோய் முதலீட்டை வெளியே எடுப்பது, ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் இருந்து பாதியில் குதிப்பதற்குச் சமம். அதே சமயம், எந்தச் சூழலில் எந்த மாதிரியான ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும், சந்தை சரிவை எப்படி லாபகரமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நுணுக்கம் பலருக்குத் தெரிவதில்லை.
இந்தக் குழப்பங்களுக்கு விடை காணவும், முதலீட்டாளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ‘பிரகலா வெல்த் பி. லிட்’ (Prakala Wealth Pvt. Ltd.) நிறுவனம் ஒரு பிரத்யேக விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது,.
யாரெல்லாம் இதில் கலந்து கொள்ளலாம்?
இந்த விழிப்புணர்வு முகாம் உங்களை ஒரு தெளிவான முதலீட்டாளராக மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது:

புதியவர்கள்: மியூச்சுவல் ஃபண்டில் முதல் அடி எடுத்து வைக்க நினைப்பவர்கள்.
குழப்பத்தில் இருப்பவர்கள்: ஏற்கனவே முதலீடு செய்து, தற்போது சந்தை இறக்கத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள்.
பணி ஓய்வு பெற்றவர்கள்: தங்கள் சேமிப்பைப் பாதுகாப்பாகவும், வருமானம் தரும் வகையிலும் முதலீடு செய்யத் துடிப்பவர்கள்.
தொழில்முறை வல்லுநர்கள்: மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் அரசு/தனியார் துறை ஊழியர்கள் எனத் தங்கள் பிஸியான நேரத்திலும் பணத்தை வளர்க்க விரும்புபவர்கள்.
இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்கள்: எதிர்காலத் தேவைகளுக்காகச் சிறு சேமிப்பைச் சரியான முறையில் முதலீடு செய்யத் திட்டமிடுபவர்கள்.
நிகழ்ச்சி எங்கே? எப்போது?
இந்தக் கருத்தரங்கம் வரும் மே 24, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. காலை 9:15 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபலமான ஹோட்டல் ராஜ் பார்க் (Hotel Raj Park)-ல் இந்த நிகழ்வு நடக்கிறது.
வெறும் ஆலோசனைகள் மட்டுமல்ல, நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட உள்ளது.
முன்பதிவு: உங்கள் இருக்கையை இப்போதே உறுதி செய்யுங்கள்!
இது ஒரு இலவச விழிப்புணர்வு முகாம் என்றாலும், இடவசதி கருதி முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்,.
முன்பதிவிற்குத் கால் அல்லது வாட்ஸ்-ஆப்பில் தொடர்பு கொள்ள: 89391-17560, 91504-23111, 99447-38234
அல்லது,
முன்பதிவு இணையதள முகவரி: docs.google.com
உங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை, சரியான நிதி ஆலோசனையோடு வளர்த்தெடுப்பதே புத்திசாலித்தனம். அந்தப் புத்திசாலித்தனமான பயணத்தைத் தொடங்க இந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நல்வாய்ப்பாக அமையட்டும்!
முக்கிய அறிவிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் முதலீட்டு ஆவணங்களை முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள்.