'படையப்பா' ரீ-ரிலீஸ் வெற்றி: தயாரிப்பாளர் தேனப்பனுக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியை வழங்கிய ரஜினிகாந்த்

Spread the love

தயாரிப்பாளர் தேனப்பனை நேரில் அழைத்து 5 சவரன் தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ஆம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’.

ரஜினிகாந்துடன் சிவாஜி கணேஷன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படையப்பா
படையப்பா

இப்படத்தை ரஜினிகாந்தும், தேனப்பனும் இணைந்து தயாரித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

ரஜினிகாந்தின் 150-வது படமாக வெளியான ‘படையப்பா’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று கமர்ஷியல் படங்களுக்குப் பென்ச்மார்க்காக இருக்கிறது.

சமீபத்தில் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியான இப்படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ரஜினிகாந்த் - தேனப்பன்
ரஜினிகாந்த் – தேனப்பன்

இந்நிலையில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘படையப்பா’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தேனப்பனை நேரில் அழைத்து 5 சவரன் தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *