பட்ஜெட் அறிக்கையுடன் ஜெப மாலை… அமைச்சர் மரியவில்சன் மீது எழும் விமர்சனங்கள்! – Kumudam

Spread the love

அப்போது, பட்ஜெட் ஆவணத்துடன் அவரது கையில் ஜெப மாலை இருந்தது கவனத்தை ஈர்த்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர், தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரை தங்களது கொள்கை வழிகாட்டிகளாகக் குறிப்பிட்டார். அதே நேரத்தில், ஜெப மாலையுடன் அவைக்கு வந்தது அந்த நிலைப்பாட்டுடன் முரண்படுவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முன்பாக, பட்ஜெட் அறிக்கையை திருப்பதி திருமலை கோயிலுக்கு எடுத்துச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அந்த நடவடிக்கைக்கும் தவெக கூட்டணியில் இடம்பெற்ற சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், சட்டப்பேரவையிலும் ஜெப மாலையுடன் அமைச்சர் மரியவில்சன் தோன்றியிருப்பது அரசியல் விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

முன்னதாக, முதல் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பெரியார் என்னத்தான் எங்கள் கொள்கைத் தலைவராக இருந்தாலும், கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *