கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட பொய்யாமணி கிராமத்தில் அமைந்துள்ளது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இப்பள்ளியில், 240 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி நாள்களில்கூட விடுமுறை எடுக்கலாமா என நினைக்கும் மாணவர்களுக்கு மத்தியில், விடுமுறை நாள்களிலும் பல மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
சென்னை, பெங்களூர், கொல்கத்தா போன்ற நகரங்களில் நடைபெற்ற தற்காப்புக் கலைப் போட்டிகளில் பரிசு பெற்று வந்திருக்கிறார்கள், இந்தப் பள்ளியின் மாணவர்கள். மாவட்ட அளவிலான ஆங்கிலக் கட்டுரை எழுதுதல் போட்டியில் இப்பள்ளி தொடர்ந்து முதல் பரிசு பெற்று வருகிறது.
ஒவ்வொரு முறையும் ஆண்டுவிழாவை “மாணவர்கள் திறமைகள் தின விழா ‘ என வெளிப்படுத்துகிறார்கள்.
மாணவர்கள் பாடப்புத்தகத்தில் படிக்கும் வரலாறுகளை நேரில் சென்று பார்ப்பதற்காக வருடந்தோறும் கீழடி, தாராசுரம், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

2024 – ம் ஆண்டு HCL குழுமம் நடத்திய பள்ளி மாணவர்களுக்கானத் திறன் தேர்வில், இப்பள்ளியில் 5 -ஆம் வகுப்பு படித்த, மாணவர் ஹர்சித் தேர்ச்சி பெற்றார்.
இந்த மாணவரின் 6 – 12 வரையிலான உயர்தரமான பள்ளி மற்றும் கல்லூரிச் செலவை HCL குழுமம் ஏற்றுள்ளது.