`பணம் தரலைனா, நிர்வாண படங்களை வெளியிட்டுவிடுவோம்’ – திருவண்ணாமலையை அதிர வைத்த சம்பவம்| tiruvannamalai – assault and sexual atrocities against women – the story behind the capture of an 8 member gang

Spread the love

அப்போது, அங்குவந்த மர்மகும்பல், அவர்களை மிரட்டி காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று தாக்கியதாகவும், இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல்ரீதியதாக தொந்தரவு செய்து, அவர் காதில் அணிந்திருந்த இரண்டு கிராம் தங்க கம்மலையும் பறித்துக்கொண்டதாகத் தெரிகிறது.

“மறுநாள் `கூகுள் பே’ மூலமாக பணம் அனுப்ப வேண்டும்’’ என மிரட்டி அனுப்பியதாகவும் கூறப்படும் நிலையில், வீட்டுக்குச் சென்ற இளம்பெண் தனது தந்தையிடம் அழுதபடி நடந்ததை கூறியிருக்கிறார். அவர் உடனடியாக, திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அடுத்தடுத்து பெறப்பட்ட ஒரே மாதிரியான இந்த இரண்டு வழக்குகளால் காவல்துறையினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். டி.எஸ்.பி ராஜன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மர்மநபர்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட கும்பல்

கைது செய்யப்பட்ட கும்பல்

அதன்படி, திருவண்ணாமலை இளம்பெண் விவகாரத்தில் ஆடையூரைச் சேர்ந்த வாசு என்கிற வாசுதேவன், பெரிய பாலியப்பட்டைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் தமிழ் என்கிற தமிழரசன், அஸ்வநாதசுரணையைச் சேர்ந்த அப்பு, லேலே என்கிற ஹரிகரன், சர்மா, சேந்தமங்கலத்தைச் சேர்ந்த அருண்குமார், திருவண்ணாமலை பாலாஜி நகரைச் சேர்ந்த சிவகணேசன் என்கிற சூர்யா ஆகிய எட்டு பேர் அடையாளம் காணப்பட்டனர். அதேபோல, தருமபுரி பெண் விவகாரத்திலும் வாசுதேவன் தலைமையிலான இந்த கும்பலே ஈடுபட்டது தெரியவந்தது.

வாசுதேவன் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி எனக் கூறப்படுகிறது.

முக்கிய குற்றவாளியான வாசுதேவன் உள்ளிட்ட எட்டு பேரை போலீஸார் தேடிப்பிடித்து கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர். இவர்களிடமிருந்து ஆறு செல்போன்கள், மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். அந்த செல்போன்களில் பதிவான காட்சிகளை விசாரணைக்குஉட்படுத்தி வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவங்கள், திருவண்ணாமலையை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *