அந்த நேரத்துல எனக்குள்ள என்னென்னவோ எமோஷன்ஸ் போயிட்டு இருந்துச்சு, அதை வார்த்தையால எப்படி வெளிப்படுத்துறதுன்னே எனக்குத் தெரியல.
ஆனா, செட்ல எல்லாருகிட்டயும் ரொம்ப ஜாலியாதான் பழகினேன். டைரக்டர் பாலாஜி தரணிதரன் சாருக்கும், விஜய் சேதுபதி சாருக்கும் ரொம்ப நன்றி.
செட்ல நான் அங்கேயும் இங்கேயுமே ஓடிட்டே இருப்பேன். ஆனா எல்லாரும் என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டாங்க.
இந்த 60 நாள் ‘பத்தா’ படத்துல வேலை பார்த்த அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பா, என்னை கேமராவுல ரொம்ப அழகா காட்டியிருந்தாங்க.
படத்துல நானும் விஜய் சேதுபதி சாரும் பேசுறப்போ, என்னை அவ்வளவு அழகா ஃப்ரேம் பண்ணியிருந்தாங்க. அந்த சீன்ல நடிக்கும்போதே நான் நிஜமாவே அழுதுட்டேன்.
விஜய் சேதுபதி சாருடன் நடிக்கும்போது பயமாத்தான் இருந்துச்சு. ஆனா, அதை நான் வெளியில காட்டிக்கவே இல்லை. பயத்தை முகத்துல வர விடாம அப்படியே கட்டுப்படுத்திவிட்டேன்” எனப் பேசி முடித்தார்.