"'பத்தா' படம் விஜய் சேதுபதி பண்ணா தான் நல்லா இருக்கும்.!"- படக்ழுவை நேரில் பாராட்டிய கமல்ஹாசன்

Spread the love

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘பத்தா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.

இப்படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார் கமல்ஹாசன். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

`பத்தா'
`பத்தா’

வீடியோவில் பேசியிருக்கும் கமல்ஹாசன், ” ‘பத்தா’ படம் பார்த்தேன். இந்தப் படத்தைப் பார்த்தபோது முதலில் எனக்கு நன்றி சொல்லத் தான் தோன்றியது.

இந்த மாதிரி படங்கள் வர வேண்டும். படத்தைப் பார்க்கும்போது சந்தோஷம் எவ்வளவு முக்கியமானது என்று நமக்கு புரியும். இது ஒரு நல்ல நகைச்சுவை படம் மற்றும் எமோஷனலான படமும் கூட.

எல்லோரும் மிகப்பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதியும் மிகப்பிரமாதமாக நடித்திருக்கிறார். ‘பத்தா’ படம் பாருங்கள். இந்தப் படம் இவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

சில கதைகள் சிலருக்காக எழுதப்பட்டது. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இது ஒரு குடும்பப் படம் எல்லோரும் பாருங்கள்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *