‘பத்தா’ மகளே பாடல் & ‘ராமாயணம்’: பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேட்டி! | Lyricist Karthik Netha Interview: On Baththa Songs, AR Rahman’s Ramayana

Spread the love

தன் வரிகளில், நம் உணர்வுகளோடு உரையாடுபவர் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. சமீபத்தில் வெளியான “பத்தா’ படத்தின் ‘மகளே’ பாடலின் வரிகளும் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

அத்தோடு, ஏ.ஆர். ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இசையில் உருவாகி வரும் ‘ராமாயணா’ படத்தின் தமிழ் பதிப்பிற்கும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். ‘பத்தா’, ‘ராமாயணா’, சமகாலச் சூழலினால் அவருக்குப் பாடல் எழுதுவதில் உண்டாகும் அழுத்தம் எனப் பல கேள்விகளோடு அவரிடம் பேட்டி கண்டோம்.

பத்தா படத்தில்...

பத்தா படத்தில்…

நம்மிடையே பேசியவர், “‘பத்தா’ படத்துல நான் மூணு பாடல்களை எழுதியிருக்கிறேன். நான் எழுதின மூணு பாடல்களுமே மகள்களைப் பற்றிப் பேசுற உறவுப் பாட்டுதான். ‘கண்ணகி’, ‘ஜோதி’ படங்களில் இருந்து பெண் குழந்தைகளைப் பத்தியே தொடர்ந்து எழுதிட்டு இருக்கேன்.

எனக்கு ஆண் குழந்தை இருந்தாலும், குழந்தைகள் விஷயத்துல ஆண்-பெண் என்கிற பாகுபாடெல்லாம் இல்லைங்கிறதுதான் என் எண்ணம். அதனாலதான் ‘மகளே’ பாட்டை எழுதும்போது கூட என் மகனை மனசுல நினைச்சுதான் எழுதினேன்.

மகள், மகன் என்ற எல்லைகளைத் தாண்டிய ஒரு பொதுவான உணர்வு அது. எனக்கு எப்படியான பாடல் எழுதக் கொடுக்கப்பட்டாலும், அந்தச் சூழலுக்குள் ஒரு எளிய மனிதனா என்னால் அந்தச் சூழலுக்குள்ள பொருந்த முடியுதானு முதல்ல யோசிப்பேன்.

அந்த வகையில இந்த ‘மகளே’ பாட்டு ஒட்டுமொத்த தகப்பன்களுக்குமே பொருந்தக்கூடிய ஒன்றுதான். அந்த இடத்துல மகளுக்குப் பதிலா எந்த உறவை வேணாலும் நீங்க பொருத்திப் பார்த்துக்கலாம். இந்தப் படமும் மனிதனின் மனமாற்றத்தைதான் பேசுது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *