பள்ளியில் தவெக நிகழ்ச்சி: `அதிலென்ன இருக்கு… இது ஒன்னும் புதுசு இல்லை’ – அமைச்சர் விஸ்வநாதன் | TVK event at school: “What’s the big deal? This is nothing new” – Minister Viswanathan.

Spread the love

இந்த நிலையில், மாவீரன் அழகுமுத்து கோனின் 69-வது குருபூஜையை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவருக்கு வீர வணக்கமும், புகழஞ்சலியும் செலுத்தப்பட்டது. எழும்பூரில் உள்ள அழகு முத்து கோனின் உருவ சிலைக்கு மரியாதை செய்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம் “அரசு பள்ளியில் முதல்வர் விஜய் உரை லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது’ குறித்து கேட்கப்பட்டது. அதற்கு `அதில் என்ன இருக்கிறது…’ எனக் கேள்வியைக் கடந்து செல்ல முயன்றார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அப்போதும், `அதைப்பற்றி அவர்களிடம்தான் கேட்க வேண்டும்… விசாரிக்க வேண்டும்’ என மழுப்பலான பதிலையே கொடுத்தார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்

தொடர்ந்து ஊடகவியலாளர்கள் `இதுபோல எந்த முதல்வர் பேச்சும் ஒளிபரப்பட்டது இல்லையே’ எனக் கேட்டது, `அப்படியெல்லாம் இல்ல சார்.. எல்லா லெவல்லயும்தான் நடந்திருக்கு. இது ஒன்னும் புதுசு கிடையாது. இதுக்கு முன்னாடி எல்லாரும் பண்ணிருக்காங்க’ என்றார்.

‘இதற்கு முன் யாரெல்லாம் இப்படி செய்திருக்கிறார்கள்’ என்றக் கேள்விக்கு `பண்ணிருக்காங்க அவ்வளவுதான்… இதுக்கு மேல கேள்விக்கு இடம்கிடையாது’ எனப் புறப்பட்டு சென்றுவிட்டார்.

த.வெ.க-வின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகனே ‘அது தவறு’ என ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுத்தப்பிறகும், காங்கிரஸின் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அதை சரி என்ற ரீதியில் பேசிச்சென்றது சமூக ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *