பள்ளி குடிநீர் தொட்டிக்குள் மனிதக் கழிவு: “மூடி மறைத்த பள்ளி நிர்வாகம்” – டிடிவி தினகரன்| Human excreta in school drinking water tank: “School administration covered it up” – TTV Dhinakaran

Spread the love

மானூர் தொடக்கப்பள்ளி உட்பட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டப்படாமல் இருப்பதால், சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக அரசுப்பள்ளிகள் மாறிவருவதோடு, அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியமே இதுபோன்ற இழிச் செயல்களுக்கு வழிவகுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

எனவே, அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, இச்சம்பவம் குறித்து காவல்துறையின் உதவியுடன் விரிவான விசாரணை நடத்தி, இழிச் செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *