’பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் வாங்கியதில் ஊழலா?’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம் | Minister Sampathkumar provides clarification on whether there was corruption in procurement of bicycles for school students

Spread the love

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கோவை பெரியார் நூலகத்திற்கு புத்தகம் கொள்முதல் செய்ததில் தவறு நடந்திருப்பது 100 சதவீதம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்சாட்டு யார் வேண்டுமானாலும் வைக்கலாம். உண்மைத் தன்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். யாரிடம் கொள்முதல் செய்யப்பட்டது என்பது குறித்து விரிவாக விசாரிக்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்குத் தரமான சைக்கிள் வழங்க வேண்டும் என்பதே முதல்வரின் கொள்கை. மாணவ-மாணவிகள் விரும்பும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உறுதித்தன்மையும் சிறப்பான வசதிகளும் கொண்ட சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. டெண்டர் எடுக்கும் நிறுவனங்கள் 300 கோடி ரூபாய் டெண்டர் சப்ளை செய்யத் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த நிறுவனத்திற்கு வழங்குவதுதான் உரிய நடைமுறை. நாம் ஒரு பட்ஜெட்டை வைத்துள்ளோம். சில நண்பர்கள் யார் சொல்லிப் பேசுகிறார்கள் எனத் தெரியவில்லை. முதல்வரின் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட தொகையில்தான் இவை நடைபெறும். அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் என்ன வேண்டுமானாலும் வரலாம். விற்பனை ஆகாத பிராண்டுகளைக்கூட விலை குறைத்துக் காட்டுவார்கள். கடந்த முறை வாங்கிய விலையை விடக் குறைவான விலையில்தான் தற்போது வாங்கப்படுகிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *