இந்நிலையில் , பழநி இணை சார் பதிவாளர் மூலம் 6-ம் தேதி தண்டயுதபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து 100 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் 2 கோடிக்கு வெள்ளைதுரை, சேதுபதி ஆகியோர் பெயரில் முறைகேடாக பத்திர பதிவு செய்யப்பட்டது.
இந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி, பதிவுத்துறை தலைவருக்கு பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறிக்கை அனுப்பினார்.

இந்நிலையில் மோசடியாக பத்திரப் பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் பத்திரப் பதிவு அலுவலரான ஜஸ்டின் மணிகண்டன், ஒரே ஒரு நாள் மட்டும் பழனி சார்பதிவாளராக பணியாற்றி இந்த பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.